• Dec 26 2024

மலையாள கனவுக் கன்னியிடம் எல்லைமீறிய முரட்டு பேன்ஸ்.. சென்னையில் பயந்த நடிகை.. வைரல் வீடியோ

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்ட படம் தான் பிரேமலு. இந்த படத்திற்கு தென் இந்திய ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியிலும் வசூலிலும் வேட்டையாடி இருந்தது. தமிழ்நாட்டில் கூட இந்த படம் அமோக வரவேற்பு பெற்றது.

பிரேமலு படத்தில் கதாநாயகியாக நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்தான் நடிகை மமிதா பைஜூ. மலையாளத்தில் கனவுக் கன்னியாக வலம் வந்த இவர், ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபெல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.

இதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிப்பதற்கு படங்களில் கமிட் ஆகியுள்ளார்.


இந்த நிலையில், சென்னையில் பிரபல மால் ஒன்றின் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை மமிதா பைஜூயை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு உள்ளார்கள். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு நடிகை மமிதா பைஜூ சிக்கி உள்ளார்.

அது மட்டுமின்றி சென்னை ரசிகர்களின் இந்த எல்லை மீறிய செயலால் அவர் பயந்துள்ளதோடு, அவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே அழைத்துச் சென்றுள்ளார்கள். தற்போது குறித்த காணொளி பெரும் வைரலாக உள்ளது.




Advertisement

Advertisement