• Dec 27 2024

கோடிகளை வாரிக் குவிக்கும் கருடன்.. மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்!

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த நடிகர் சூரி தற்போது இரண்டாவது முறையாக ஹீரோவாக நடித்த படம் தான் கருடன். இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதோடு இதில் சூரியின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

இயக்குனர் துறை செந்தில் இயக்கத்தில், நடிகர் சூரி உடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ரோஷினி ஹேரிப்ரியன், ஸ்வேதா, சமுத்திரகனி, மைம் கோபி, ஆர் வி உதயகுமார், வடிவுக்கரசி, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலன் அளித்துள்ளார்கள்பலர் நடித்துள்ளார்கள்.

விடுதலை படத்தில் எப்படி உணர்ச்சி பொங்க நடித்து இருந்தாரோ  அதேபோல கருடன் படத்திலும் மெறுகேற்றிக் கொண்டு நடித்துள்ளார் சூரி. முதல் பாதியில் வழக்கமான கதையை சொன்ன இந்த படம், இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்புடன் மாஸ் ஆக்சன் காட்சிகளுடன் தியேட்டரை அலற விட்டுள்ளார் சூரி.


இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான கருடன்  திரைப்படத்தின் மூன்றாவது நாள் வசூல் விபரம் வெளியாகி உள்ளது.

அதன்படி முதல் நாளிலேயே 3.5 கோடிகளை வசூலித்த கருடன், இரண்டாம் நாளில் 4. 35 கோடிகளையும் நேற்றைய தினம் 6.10 கோடியை வசூலித்துள்ளது. ஆக மொத்தத்தில் கருடன் படம் 14.45 கோடிகளை இந்திய அளவில் வசூலித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement