• Dec 27 2024

மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகை சுகன்யா- அதுவும் எந்த சீரியலில் நடிக்கப்போகின்றார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் நடிகை சுகன்யாவை தெரியாதவர்களே இருக்க முடியாது என்ற அளவுக்கு ஒரு கலக்கு கலக்கியவர் தான் நடிகை சுகன்யா. இவர்  புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், கமல் எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார்.

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வந்தார்.நடிப்போடு நின்றுவிடாது இசையமைப்பாளராக,டப்பிங் கலைஞராக, , நடன கலைஞராகவும் தனது திறமைகளை காட்டியுள்ளார்.


வெள்ளித்திரையில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கினார் என்று தான் சொல்ல வேண்டும் .ஏன் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் கதாநாயகியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தார்.

திருமணத்தின் பின் நடிப்பு பக்கமே வராத  சுகன்யா தற்பொழுது சின்னத்திரையில் புதிதாக ஒளிபரப்பாக போகின்ற தொடரில் நடிக்க போகின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் எந்த தொலைக்காட்சியில் என்ன தொடர் என்று இது வரையில் தகவல் வெளிவரவில்லை.இந்த தகவலை கேள்விப்பட்ட சுகன்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றார்கள்.

Advertisement

Advertisement