• Dec 26 2024

அஜித்தை அடுத்து த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு.. ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருக்கும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்று தெரியாத நிலை தான் உள்ளது.

ஒரே நேரத்தில் கமல்ஹாசனின் 'இந்தியன் 2’ ரஜினியின் ’வேட்டையன்’ உள்பட ஒரு சில படங்களை தயாரித்து அகலக்கால் வைத்த லைக்கா நிறுவனம் தற்போது ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு பணம் இல்லாமல் இருப்பதாகவும் அதனால் தான் அந்த படத்தின் படப்பிடிப்பு கால தாமதம் ஆகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் தனது அடுத்த படமான ’குட் பேட் அக்லி’ படத்திற்கு சென்று விட்டார் என்பதும் அந்த படத்தில் தான் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் மீண்டும் எப்போது அழைக்கிறார்களோ அப்போது அந்த படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று அஜித் முடிவு செய்து விட்ட நிலையில் த்ரிஷாவும் ‘விடாமுயற்சி’ படத்திற்காக கொடுத்த கால்ஷீட் வீணாக்காமல் மற்ற படங்களுக்கு கொடுத்து விட்டதாக தெரிகிறது.

குறிப்பாக ‘விடாமுயற்சி’ படத்திற்காக கொடுத்த தேதிகளை கமல்ஹாசனின் ’தக்லைஃப்’ மற்றும் சிரஞ்சீவியின் படத்திற்கு அவர் கொடுத்து விட்டதாகவும் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் தற்போது படப்பிடிப்பு ஆரம்பித்தால் கூட த்ரிஷாவிடம் கால்ஷீட் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதேபோல் ‘விடாமுயற்சி’ படத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது அடுத்தடுத்த வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பதால் அந்த படம் எப்போது தொடரும் என்ற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement