• Dec 26 2024

முத்துவும் சத்யாவும் சேர்ந்துட்டாங்களா? ’சிறகடிக்க ஆசை’ கதை வேற மாதிரி போகுதே..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு வாரமும் ஒரு சில பிரச்சனைகள் மற்றும் திருப்பங்கள் ஏற்பட்டு பார்வையாளர்களை கதை குழுவினர் டென்ஷன் ஆக்கி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு சத்யா மற்றும் முத்து இடையே பிரச்சினை ஏற்பட்டது என்பதும் சத்யா தவறான வழியில் செல்வதை முத்து கண்டிக்க அதை சத்யா கேட்காமல் சிட்டியுடன் சுற்றிக் கொண்டிருப்பது சில விபரீதத்தை ஏற்படுத்தும் என்று முத்து பயந்து வருகிறார் என்பதும் பார்த்தோம்.

குறிப்பாக சத்யாவின் கையை முத்து உடைத்ததை அடுத்து மீனா மற்றும் அவரது குடும்பமே முத்துக்கு எதிராக இருக்கிறது என்றும் அப்படி இருந்தும், முத்து தனது அம்மாவிடம் இருந்து  பணத்தை திருடியது சத்யா தான் என்று சொல்லாமல் அவரை காப்பாற்றி வருகிறார் என்பதையும் தெரிந்தது.

இந்த நிலையில் முத்து நண்பர் செல்வம் வீட்டிற்கு சத்யா மற்றும் முத்து சென்ற புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சத்யா மற்றும் முத்து ஒற்றுமையாக இருப்பதை பார்க்கும்போது சத்யாவின் உண்மை வெளியே தெரிந்து விட்டது என்றும் அதன் பின்னர் சத்யா மற்றும் முத்து மீண்டும் சேர்ந்து விட்டார்கள் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

தற்போது தான் முத்து குடித்தார் என்றா பிரச்சனை முடிவடைந்த நிலையில் அடுத்த பிரச்சனையாக ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா பிரச்சனை தான் ஆரம்பமாகும் என்றும் இந்த வாரம் சத்யா, முத்து இடையிலான பிரச்சனை அதன் பின் மீண்டும் அவர்கள் ஒன்று சேரும் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement