• Dec 25 2024

காசு வந்தால் திமிரும் வந்துவிடுமா? எல்லை மீறும் யூடியூபர்களின் அட்டகாசங்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

யூடியூபில் வீடியோ பதிவு செய்யும் யூடியூபர்களுக்கு அதிக அளவில் வருமானம் வருவதை அடுத்து அவர்களுக்கு கூடவே திமிரு வந்து விடுகிறது என சமூக வலைதள பயனாளிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். 

ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் சுவாரசியமான விஷயங்களை பதிவு செய்தால் அந்த சேனல் ஹிட்டாகிவிடும் என்பதும் இதனை அடுத்து அந்த சேனலுக்கு வருமானம் கொட்டுவதை அடுத்து சின்ன வயதிலேயே லட்சக் கணக்கில் சம்பாதிப்பதால் தலைகால் புரியாமல் யூடியூபர்கள் ஆடி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. 

சின்ன சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குவதும், ஒன்றுமே இல்லாத விஷயத்தை பிரபலம் ஆக்கி வீடியோ பதிவு செய்வதும், அதனால் வரும் வருமானம் காரணமாக தலைக்கனத்துடன் நடந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் தான் சமீபத்தில் தனது மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்து கொண்டாடிய இர்பான் சர்ச்சைக்கு உள்ளானார். 

அதேபோல் டிடிஎப் வாசன் காரை ஓட்டி கொண்டிருக்கும் போது சாலை விதிகளை மதிக்காமல் செல்போனில் பேசிய வீடியோவை தனது யூடியூபில் பதிவு செய்து சர்ச்சைக்கு உள்ளானார். இதில் இர்பான் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்பட்ட நிலையில் டிடிஎஸ் வாசன் மீது மட்டும் கைது நடவடிக்கை வரை சென்றது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இர்பான், டிடிஎஸ் வாசனை அடுத்த தற்போது விஜே சித்து மீது சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. செல்போனில் பேசியபடி அஜாக்கிரதையாக விஜே சித்து வாகனத்தை ஒட்டியதாகவும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் காரை ஓட்டிய அவர் இது குறித்த வீடியோவையும் தனது சேனலில் பதிவு செய்துள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழ்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் 

மேலும் அவர் தனது வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்களையும் பயன்படுத்துவதால் இளைஞர்கள் அவரால் கெட்டுப் போகிறார்கள் என்றும் மாணவர்கள் இந்த வீடியோவை பார்த்து தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement