• Dec 26 2024

லால்சலாம் படுதோல்வி.. போட்டு கொடுத்த ஐஸ்வர்யா.. லெப்ட் ரைட் வாங்கிய சுபாஷ்கரன்..

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'லால் சலாம்' என்ற படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதும் படம் படுதோல்வி அடைந்ததையும் ஏற்கனவே பார்த்தோம்.

 
இந்த நிலையில் இந்த படம் தோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த  மொய்தின் பாய் கேரக்டர் நன்றாக அமைக்கப்பட்டு இருந்தாலும் ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்றும் அது மட்டும் இன்றி திரைக்கதை மிகவும் குழப்பமாக இருந்ததாகவும் சின்ன சின்ன கதைகள் ஆங்காங்கே வந்து பார்வையாளர்களை குழப்பியது என்றும் கூறப்பட்டது.

 
மத நல்லிணக்கம் என்ற ஒரு நல்ல நோக்கத்திற்காக படம் எடுத்தாலும் அதை கொண்டு போய் சேர்த்த விதம் சரியில்லை என்று விமர்சகர்கள் கூறி இருந்தனர். இந்த நிலையில் ’லால் சலாம்’ திரைப்படம் சரியாக போகாததற்கு காரணம் லைகா நிறுவனத்தின் தமிழ்குமரன் தான் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சுபாஷ்கரனிடம் கூறியுள்ளதாகவும் அதனால் சுபாஸ்கரன் ஆத்திரமடைந்து என்ன, ஏது என்று விசாரிக்காமல் தமிழ்க்குமரனை திட்டியதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

’லால் சலாம்’ படத்தை போதுமான அளவு புரமோஷன் செய்யவில்லை என்றும் அதனால் தான் இந்த படம் தோல்வி அடைந்தது என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதை லைகா நிறுவனத்தினரே ஏற்காத நிலையில் அதை புரிந்து கொள்ளாமல் சுபாஷ்கரன் திட்டியதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் படத்துக்கு தேவையான புரமோஷன்  தேவையில்லை என்றும் படம் நன்றாக இருந்தாலே ஓடி இருக்கும் என்பதை புரியாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவ்வாறு போட்டு கொடுத்து விட்டதாக தமிழ்க்குமரன் தரப்பினர் புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement