• Dec 26 2024

அஜித் நண்பர்கள் அடுத்தடுத்து மரணம்.. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போட்ட கண்டிஷன்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

அஜித்துக்கு நெருக்கமான இரண்டு நண்பர்கள் அடுத்தடுத்து காலமானதை அடுத்து அஜித் குடும்பத்தினர் அவருக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் தன்னுடைய நலனை கருத்தில் கொண்டு குடும்பத்தினர் கூறிய நிபந்தனைகளை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் கலை இயக்குனராக பணிபுரிந்தவர் மிலன். இவர் வெளிநாட்டில் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அஜித்தின் நெருங்கிய நண்பரான இவருடைய மறைவு அஜித்துக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீளும் முன்பே வெற்றி துரைசாமி காலமானார்.அஜித் பைக் பயணம் செய்யும் செல்லும்போதெல்லாம் வெற்றி துரைசாமி அவருடன் செல்வார் என்பதும் இருவரும் ஒரு கட்டத்தில் மிக நெருங்கிய நண்பர்களாகி விட்ட நிலையில் வெற்றி துரைசாமி இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்க இருந்ததாக கூறப்பட்டது.



இந்த நிலையில் தான் வெற்றி துரைசாமி திடீரென ஏற்பட்ட விபத்தில் காலமான நிலையில் அஜித் மிகவும் நொறுங்கி போனதாக கூறப்படுகிறது. ஒரு சில மாத இடைவெளியில் இரண்டு நண்பர்களை பறிகொடுத்த அஜித் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் அஜித்தின் நலனை கருத்தில் கொண்டு உடல் நலனை சரியாக கவனிக்கும்படி அறிவுரை கூறியதாக தெரிகிறது.

குறிப்பாக மதுவை இனிமேல் தொட வேண்டாம் என்றும், சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள், மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள், நீண்ட தூர பைக் பயணம் வேண்டாம் போன்ற அறிவுரைகளை வழங்கி இருப்பதாகவும் இதில் ஒரு சில அறிவுரைகளை அஜீத் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.



அடுத்தடுத்த நண்பர்களின் மறைவை அடுத்து இனி உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த அஜித் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Advertisement

Advertisement