• Dec 26 2024

டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார் அஜித்.. அக்கம் பக்கத்தில் இருந்து நலம் விசாரிக்க குவிந்த பொதுமக்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் டிஸ்சார்ஜ் ஆகி இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் அவருடைய வீட்டின் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நலம் விசாரிக்க வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் நேற்று முன்தினம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் அவரது காதுக்கு கீழ் நரம்பு வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது பெரிய ஆபத்து இல்லை என்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் கூறிய போதிலும் உடனே அறுவை சிகிச்சை செய்யுமாறு அஜித் வலியுறுத்தியதாகவும் இதையடுத்து நேற்று முன் தினம் இரவு அவருக்கு 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை என்பது பொய்யான தகவல் என்றும், அவரது அவருக்கு காதுக்கு கீழ் நரம்பு வீக்கம் மட்டுமே இருந்தது அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றும் தெரிவித்து இருந்தார்.



இந்த நிலையில் இன்று அஜித் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை அஜித்தை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ததாகவும் இதனை அடுத்து அவர் நலமுடன் வீடு திரும்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியது தெரிந்தவுடன் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்கள் அவரது வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அஜித் பூரண நலத்துடன் இருப்பதாகவும் அடுத்த வாரம் நடைபெற இருக்கும்விடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என்றும் அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement