• Dec 26 2024

'உனக்கென்ன வேணும் சொல்லு… உலகத்தைக் காட்டச் சொல்லு…' மகனிடம் பாசம் காட்டும் அஜித் க்ளிக்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் தனது மகன் ஷூ போடும் போது அவருக்கு பாசத்துடன் உதவி செய்யும் புகைப்படம் கடந்த சில மணி நேரங்களாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் குடும்பத்தின் மீது மிகவும் பாசமாக இருப்பார் என்பதும் குடும்ப உறுப்பினர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார் என்பதும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். மேலும் குழந்தைகளை அவர் சிறு வயதில் இருந்தே மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்துள்ளார்.

ஒரு சின்ன குழந்தை அவருடைய வீட்டிற்கு வந்தால் கூட அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் குழந்தைகளும் அவர்களை வாங்க போங்க என்று தான் மரியாதையுடன் அழைப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் மகன் சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பள்ளிக்கு அஜித் அடிக்கடி சென்று வருவார் என்பதும் எந்த ஒரு பள்ளி விழா நடந்தாலும் அதில் அவர் தவறாமல் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இருந்தால் கூட அதை ரத்து செய்துவிட்டு மகன் பள்ளி நிகழ்ச்சிக்கு செல்வது அவருக்கு வழக்கமாக இருக்கிறது என்பதும் மகனின் மீது அவ்வளவு அக்கறை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தின் மகன் ஆத்விக் ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் நிலையில் மகனின் கனவை நனவாக்க அஜீத் அவருக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவர் கால்பந்து போட்டி ஒன்று கலந்து கொண்டு கோப்பை வாங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அஜித் தனது மகன் ஷூ போடும்போது அவருக்கு உதவி செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனது மகனின் மீது அஜித் எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் என்று வருகிறது என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement