• Dec 26 2024

தன்னைத் தானே செதுக்கிய அஜித் குமாரிடம் குவிந்துள்ள சொத்துக்கள்! அசர வைக்கும் வாகன விபரங்கள்

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

இன்றைய தினம் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருவதோடு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

1971 ஆம் ஆண்டு மே முதலாம் தேதி பிறந்த அஜித்குமார், என் வீடு என் கணவர் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன்பின்பு அமராவதி படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகி, தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் திகழ்ந்து வருகிறார்.

இவ்வாறு தன்னைத்தானே செதுக்கிய கலைஞனாக நடிகர் அஜித்குமார் காணப்படுவதோடு இன்றைய தினம் தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இவருக்கு அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தளபதி ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


இந்த நிலையில், இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடும் அஜித் குமாரின் சொத்து மதிப்பு பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளது.


அதன்படி இத்தனை ஆண்டு காலமாக வெற்றி படங்களை வாரி வழங்கி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த நடிகர் அஜித்திடம் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் வரை சொத்துக்கள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் திருவான்மையூரில் பிரம்மாண்ட வீடு ஒன்றும் உள்ளதாகவும், சென்னையில் உள்ள வீட்டில் கார்கள், பைக் என்று ஏராளமாக  காணப்படுவதாகவும், அதிலும் நல்ல பிராண்ட் கார்களும் பைக்குகளும் அவரிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அவரிடம் ஹெலிகாப்டர் ஓட்டும் லைசன்ஸ், விமானம் ஓட்டும் லைசன்ஸ் எனஅனைத்து விதமான வாகனங்களிலும் எக்ஸ்பெர்ட்டான அஜித் குமார்,  உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் தனது வேர்ல்ட் பைக் டூர் கனவையும் கொஞ்சமா நிறைவேற்றி வருவதையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆரம்பத்தில் மெக்கானிக் வேலை செய்த நடிகர் அஜித் குமாரின் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


 


Advertisement

Advertisement