தமிழ் சினிமாவில் எதிர்வரும் ஆறாம் தேதி பிரம்மாண்டமான ரிலீஸ் க்கு தயாராக உள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித் நடித்துள்ளதோடு த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடித்துள்ளார்கள். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளதால் இதன் எதிர்பார்ப்பு அதிக அளவிலேயே காணப்படுகிறது.
அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது. அதன் பின்பு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது .
அதேபோல ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இவ்வாறு அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே ஆண்டில் வெளியாக உள்ளதை முன்னிட்டு தல ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் காணப்படுகின்றார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் விடாமுயற்சி படத்தின் பிரீ புக்கிங் மட்டுமே சுமார் 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
மேலும் நான்கு மணி நேரத்திலேயே 44 ஆயிரம் டிக்கட்டுகள் விற்று சாதனை படைத்துள்ள விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளிலேயே 40 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!