பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதைகளத்துடன் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ராதிகாவும் மையூவும் வீட்டை விட்டு வெளியேறியதால் ரொம்ப அப்செட் ஆக காணப்படுகின்றார் கோபி.
இதனால் இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்து ஈஸ்வரி அவருடன் மனம் விட்டு பேசுகின்றார். அதன்படி ராதிகா உன்ன தூக்கி வீசிட்டு போயிட்டா.. எதற்காக அவளை நினைத்து கவலைப்படுகின்றா? உனக்காக நாங்க எல்லோரும் இருக்கின்றோம் என்று சொல்லுகின்றார்.
இதனால் ராதிகாவை மறந்துவிட்டு வாழும்படி ஈஸ்வரிக்கு சொல்லுகின்றார். ஏற்கனவே ஈஸ்வரிக்கு பாக்யாவையும் கோபியையும் சேர்த்து வைக்கும் எண்ணம் இருக்கும் நிலையில் ராதிகா வீட்டை விட்டு போனதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
எனவே இந்த சீரியலில் மீண்டும் கோபியும் பாக்கியாவும் இணைவார்களா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ்குமார் வழங்கிய பேட்டியலும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் தற்போது ராதிகாவும் கோபியை அவருடைய வீட்டில் விட்டுவிட்டு தனியாக சென்று விடுகின்றார். இதனை பார்க்கும் போது மீண்டும் பாக்யாவுடன் கோபி சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. எனவே கோபி மீண்டும் பாக்கியாவுடன் இணைவாரா? பாக்கியா அவரை ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!