தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் சூர்யா நடிப்பில் இறுதியாக கங்குவா திரைப்படம் வெளியானது. வரலாற்று கதை அம்சம் நிறைந்த கங்குவா படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை.
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் மற்றும் சூரரைப் போற்று திரைப்படம் ஆகியவை மாபெரும் வெற்றி பெற்றன. அதற்குப் பின்பு கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக கங்குவா படத்தில் நடித்து வந்தார் சூர்யா.
ஆனாலும் அவருடைய உழைப்புக்கு ஏற்ற பலன் இந்த படத்தில் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து ரெட்ரோ படம் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இயக்கும் 45வது படத்தில் நடித்து வருகின்றார் சூர்யா.
இந்த நிலையில், சூர்யாவின் 45 வது படத்தை இயக்கும் ஆர்.ஜே பாலாஜி ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து டென்ஷன் ஆகியுள்ள சம்பவம் ஒன்று பற்றி வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், சூர்யாவின் 45 வது படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குகிறார். அவர் சூர்யாவை வைத்து இயக்கும் இந்த படத்தின் மூலம் எப்படியாவது பெரிய இயக்குனராக ஆகிவிட வேண்டும் என திட்டம் போட்டுள்ளார்.
இவரின் பட சூட்டிங்ற்க்கு சுமார் 500, 600 பேர் வேணும் என்று கூறுவாராம். ஆனால் அதில் பாதி அளவானவரே கிடைத்துள்ளனர். எனினும் அதனை எடிட்டிங்கில் சமாளிக்கலாம் என ஆர்.ஜே பாலாஜிக் சொல்லி உள்ளனர்.
ஒருநாள் இப்படித்தான் 300 பேர் வேண்டும் என ஆர்.ஜே பாலாஜி கேட்டுள்ளார். ஆனால் அன்றைய தினம் வெறும் 150 பேர் தான் சூட்டிங்ற்க்கு வந்துள்ளார்கள்.
இதனால் டென்ஷனான பாலாஜி அன்றைய ஷூட்டிங்கை கேன்சல் பண்ணியுள்ளார். இதனால் பட தயாரிப்பு கம்பெனிக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் நட்டம் என கூறப்படுகிறது. பொதுவாக விஜயின் படத்திற்கு ஒரு நாள் ஷூட்டிங் செலவு மட்டுமே 30 - 35 கோடி செல்லும்.
அதே போல சூர்யா நடிக்கும் படங்களில் ஒரு நாள் ஷூட்டிங் இருக்கு 20 தொடக்க 30 லட்சம் வரை செலவாகும் . இவ்வாறு பல லட்சங்களை செலவழித்து படமெடுக்கும் போது அதற்கேற்ற வகையில் அனைத்தும் இருக்க வேண்டும் என பாலாஜி துடிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
Listen News!