• Apr 18 2026

‘கோட்’ பட ரிலீஸ் தேதியை லாக் செய்த விஜய்.. வேண்டாம் என எச்சரித்த அல்லு அர்ஜுன்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் முடிவு செய்த நிலையில் அந்த தேதி வேண்டாம் என அல்லு அர்ஜுன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் ரஷ்யாவில் இன்னும் சில நாட்களில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் விஜய் இடம் ‘கோட்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஆலோசனை செய்த போது ஆகஸ்ட் 15 சுதந்திர தின விடுமுறையின் போது படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று அறிவுறுத்தி  உள்ளார். இதையடுத்து சுதந்திர தினம் விடுமுறை விருந்தாக ‘கோட்’ வெளியிட திட்டமிட்ட நிலையில் இது குறித்து கேள்விப்பட்ட அல்லு அர்ஜுன் எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.  

அவர் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட இருப்பதால் அந்த தேதியில் உங்கள் படம் வெளியானால் ஆந்திரா தெலுங்கானாவில் தியேட்டர் கிடைக்காது என்று கூறியதாகவும் எனவே ஒரு வாரம் முன்பு அல்லது ஒரு வாரம் பின்பு ரிலீஸ் செய்யுங்கள் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே ’வாரிசு’ திரைப்படம் வெளியான போதும் இதே பிரச்சினை வந்தது என்பதும் அப்போது தமிழில் வெளியான இரண்டு நாட்கள் கழித்து தான் தெலுங்கில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ‘கோட்’ படத்தையும் வெளியிடுவார்களா? அல்லது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement