• Dec 25 2024

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உச்சம்தொட்ட அமரன்.. தடபுடலாக விருந்து வைத்து கொண்டாடிய எஸ்கே..!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படம் நாட்டுக்காக போரிட்டு உயிரிழந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

ராணுவ வீரரான மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்கு தனது உடல் கட்டமைப்பை தேற்றியதோடு ஒரு ராணுவ வீரராகவே அமரன் படத்தில் வாழ்ந்து காட்டி இருந்தார் சிவகார்த்திகேயன். இவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார்.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பும் சாய் பல்லவியின் எமோஷனல் ரீதியான உணர்வுகளும் ரசிகர்களை அழ வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். தியேட்டரில் படம் பார்த்தவர்கள் வெளியே வரும்போது அழுத காட்சிகள் இணையத்தில் படு வைரலாக காணப்பட்டது.


சிவகார்த்திகேயனின் கேரியரின் அமரன் திரைப்படம் சிறந்த திருப்புமுனையாக அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 300 கோடி வசூலித்து உள்ளது அமரன் திரைப்படம். சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சி பலரையும் வியக்க வைத்த ஒன்றாக காணப்படுகின்றது.


அமரன் படத்தை பார்த்த ரசிகர்கள் மேஜர் முகுந்த்  வரதராஜனையும் அவருடைய மனைவி இந்துவையும் இன்றுவரை சோசியல் மீடியாவில் புகழ்ந்து தள்ளி வருகின்றார்கள். மேஜர் முகுந்த் உயிரிழந்த பிறகும் அவருக்காகவே வாழும் இந்து மற்றும் அவருடைய மகள் பற்றிய தகவல்களும் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில்,  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான  படங்களில் அமரன் திரைப்படம் தான் முதன்முதலாக 300 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக தனது 23வது படக்குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படத்தை ஏ. ஆர் முருகதாஸ் இயக்கி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement