• Dec 25 2024

முத்துவுக்காக குவிந்த பணம்.. வெளிறிப் போன விஜயாவின் முகம்! கடும் சிக்கலில் மீனா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜை எல்லாரும் ரவுண்டு கட்டி அடிக்க, அண்ணாமலை அவர்களை விளக்கி விட்டு மனோஜையும் ரோகிணியையும் அமர வைத்து அவரிடம் சந்தோஷ் சார் உன்னிடம் போனில் கதைக்கும் போது என்ன சொன்னார் என்று பொறுமையாக கேட்கின்றார். இதன் போது சந்தோஷ் சார் ஒரு ஆளுக்கு 25000 கொடுக்கச் சொன்னதாக சொல்லுகின்றார் மனோஜ்.

அப்படி என்றால் ஏன் அதை சொல்லவில்லை என்று கேட்க, மீண்டும் ஷூட்டிங் முடிந்த பிறகு தருவோம் என்று இருந்தேன் என மனோஜ் சொல்ல, அண்ணாமலை கோபத்தில் மனோஜ்க்கு அடிக்க  செல்கின்றார். ரோகினியிடமும் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா என்று மீனா கேட்க, அவரும் அதே பதிலை தான் சொல்லுகின்றார்.

இதனால் உடனே காசை அனுப்புமாறு வீட்டார்கள் சொல்ல, ரோகினி வேறு வழியில்லாமல் மனோஜின் ஃபோனை எடுத்து எல்லோருக்கும் காசை அனுப்பி விடுகின்றார். ஆனால் அம்மாவுக்கு 15,000 கொடுக்குமாறு சொல்லுகின்றார் மனோஜ். ஏன் என்று அண்ணாமலை கேட்க, ஏற்கனவே அம்மாவுக்கு 10,000 கொடுத்து விட்டதாக அதையும் போட்டுக் கொடுக்கின்றார்.


இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று விஜயாவிடம் அண்ணாமலை கேட்க, அவரும் மனோஜை போலவே சூட்டிங் முடிந்த பிறகு சொல்லுவோம் என்று இருந்தேன் என்று சொல்ல, நீ சொல்லவே வேண்டாம் என திட்டி செல்கின்றார். அதன் பின்பு முத்துவுக்கு மீனா காருக்கான டியூ கட்டி விடுகின்றார். அண்ணாமலையும் முத்துவின் காருக்கு டியூ கட்ட வர, அங்கு தாங்கள் கட்டி விட்டதாக சொல்லுகின்றார்கள். ஆனாலும் அடுத்த மாதம் தான் கட்டுவேன் என்று அண்ணாமலை செல்கின்றார்.

அதன் பின்பு விஜயாவின் டான்ஸ் கிளாஸுக்கு மீனா வருகின்றார். பார்வதி மீனாவிடம் பூ கொண்டு வர சொன்னதோடு அதை பூஜை அறையில் வைத்து விடுமாறு சொல்லுகின்றார். மேலும் அந்த நேரத்தில் மழை வருவது போல இருக்க, மீனா மொட்டை மாடிக்கு போய் துணிகளை எடுத்து வைக்குமாறு சொல்லுகின்றார்.

அதே சமயம் ரதியின் அம்மா விஜயாவுக்காக புடவைகளை கொண்டு வந்து காட்டிக் கொண்டுள்ளார். அவர் மூன்று புடவைகளை எடுக்க 45,000 என்று சொல்லுகின்றார். இதனால் விஜயா அந்த காசை எடுத்து வருமாறு சொல்ல பார்வதி அங்கு சென்று பார்த்ததும் காசை காணவில்லை. இதனால் விஜயாவை கூப்பிட்டு இந்த விஷயத்தை சொல்ல அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement