• Apr 24 2026

அம்சமா அழகா ஸ்மைலி லுக்கில் கலக்கும் சீரியல் நடிகை! வெளியான லேட்டஸ்ட் கிளிக்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வரும் சன் தொலைக்காட்சி, விஜய் டி.வி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்களுக்குப் போட்டியாக பல சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. 

ரியாலிட்டி நிகழ்ச்சிகள் விஷயத்தில் சற்றே சறுக்கினாலும், சீரியல் விஷயத்தில் தன்னை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பதை சன் டி.வி. அவ்வப்போது நிரூபித்து வருகிறதை நாம் பார்க்கின்றோம்.

அத்துடன், கயல் என்ற பெண், அப்பா இல்லாத தனது குடும்பத்தை காப்பாற்ற எப்படி போராடுகிறாள், அதனை அழிக்க அவரது பெரியப்பாவின் குடும்பத்தினரும், அவள் மீது கொண்ட ஆசையால் கயல் வேலை பார்க்கும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் என்னென்ன சதித்திட்டங்களை தீட்டுகிறார்கள் என்பதை அதிரடி திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான காட்சி அமைப்புடன் ஒளிபரப்பி வருகின்றது.


இந்த நிலையில், கயல் சீரியலில் நாயகியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சைத்ரா ரெட்டி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவரது முதல் சீரியலில் வில்லியாக அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகை சைத்ரா ரெட்டி.

அத்துடன், இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களிலும் இவரது அழகான சிரிப்பு ரசிகர்கள் மத்தியில் தனிக் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement