• Jan 13 2025

ஆனந்தி கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டும் நந்தா? ட்விஸ்ட் கொடுத்த ஆனந்தி! அன்பின் நிலை?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

இதுவரைக்கும் நந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆனந்தி மலைக்கோவிலுக்கு செல்வது போல காட்டப்பட்டது. ஆனாலும் இன்றைய ப்ரோமோவில் ஆனந்திக்கு நந்தா உண்மையான அழகன் இல்லை என தெரிந்து விட்டது போல் காட்டப்படுகிறது.

இதற்கு பின்னால் கண்டிப்பாக ஏதாவது பிளாஷ்பேக் நடந்திருக்கும். மலைக்கோவிலில் திருமணம் செய்து கொள்ள வரும் ஆனந்தி நீ அழகனின் முகமூடியோடு இருந்தால் நான் உன்னை நம்பி வந்து விடுவேனா என கேட்டு நந்தாவை பளார் என  அறைந்து விடுகிறார்.


ஆனாலும் நந்தா தான் செட் பண்ணிய ஆட்களை வைத்து ஆனந்தியை கட்டாய திருமணம் செய்ய பார்க்கிறார். அந்த நேரத்தில் சரியாக அன்பும் அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்.

மறுபக்கம் அதே இடத்திற்கு மகேஷும் மித்ராவும் வந்து கொண்டிருக்க, மகேஷிடம் மித்ரா ஆனந்தி கிடைக்க மாட்டா  என்பது போல சொல்லிக் கொள்கிறார்.

இதேவேளை, நந்தா மற்றும் அவர் செட் பண்ணி ஆட்களுடன் அன்பு சண்டை போட்டு ஆனந்தியை காப்பாற்றி விடுவார் என்றே தோன்றுகிறது. ஆனால் அன்பு தான் உண்மையான அழகர் என்று ஆனந்தியிடம் சொல்வாரா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement

Advertisement