• Dec 26 2024

03 மாதங்களை கடந்து OTT யில் ரிலீஸாகும் அந்தகன்.. எப்போ தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் பிரசாந்த். இவர் இயக்குனர் தியாகராஜாவின் மகன் ஆவார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் விஜய் அஜித்துக்கு நிகராக கொண்டாடப்பட்ட ஒரே ஹீரோ பிரசாந்த் தான்.

ஆனாலும் அதற்குப் பிறகு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக இடமே தெரியாமல் காணாமல் போனார். அதன் பின்பு தற்போது விஜய் நடித்த கோட் படத்திலும் அவருடைய தந்தை இயக்கத்தில் வெளியான அந்தகன் படத்தின் மூலமும் கம்பேக் கொடுத்தார்.

ஹிந்தியில் தேசிய விருது பெற்ற அந்தாதூண் படத்தில் தமிழ் ரீமேக் தான் அந்தகன் திரைப்படம். இந்த படம் பாக்ஸ் ஆபீசிலும் மாபெரும் வசூலை நிகழ்த்தியது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றிய தியாகராஜன் இந்த படத்தை பிரசாந்தை வைத்து அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.


அந்தகன் படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளதோடு இவர்களுடன் சிம்ரன், சமுத்திரக்கனி, கார்த்திக், கே எஸ் ரவிக்குமார், வனிதா, ஊர்வசி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த படம் ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆனதை போல தமிழிலும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில், அந்தகன் படம் வெளியாகி மூன்று மாதங்களை கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி அந்தகன் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது. எதிர்வரும் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைன்  ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement