• Dec 25 2024

எனக்கு சுயநலமா வாழத் தெரியல.. சூப்பர் ஸ்டாரை அட்டாக் செய்த விஜய்? தெறிக்கும் ஹேஷ்டேக்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநாட்டை நேற்றைய தினம் வெற்றி கரமாக நடத்தி முடித்துள்ளார் விஜய். சுமார் 4:00 மணிக்கு ஆரம்பித்த இந்த மாநாடு ஆறு முப்பது மணிக்கு எல்லாம் ஒட்டுமொத்தமாக முடித்து மக்களை உணர்ச்சிவசப்படுத்தி உள்ளார் விஜய்.

ஆடியோ லாஞ்சை விட குறைவான நேரத்தில் முக்கிய பாய்ண்ட்களை மட்டும் எடுத்துச் சொல்லி தான் தாக்க நினைத்த கட்சிகளை அட்டாக் செய்து ஆவேசமாக பேசி மக்களை தன் வசப்படுத்தி உள்ளார்.

இந்த நிலையில், யார் ஓட்டு போட்டாலும் ரஜினிகாந்த் ரசிகர்கள் நிச்சயம் விஜக்கும் அவரது கட்சிக்கும் ஓட்டு போட மாட்டார்கள் என்று மறைமுகமாக சூப்பர் ஸ்டாரை விஜய் தாக்கி பேசியதாக ரஜினி ஃபேன்ஸ் கடுப்பாகி உள்ளனர்.


மேலும் இந்த அரசியல் எல்லாம் எதற்கு நாம பாட்டுக்கு நடிச்சோமா நாலு காசு பார்த்தோமானு இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனா நாம மட்டும் நல்லா இருக்கும் என்று நினைக்கிறது சுயநலம் இல்லையா? நம்மள வாழ வச்ச இந்த மக்களுக்கு ஏதாவது செய்யணும் இல்லையா? என்ற கேள்வி வந்தது. அதற்கான பதிலாக தான் அரசியலில் களமிறங்க முடிவு எடுத்தேன் என விஜய் பேசியுள்ளார்.

இதனால் மோசமான கேஷ்டக்குகளை விஜய்க்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ஹெக்டர்களும் பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் விஜயின் சுயநல பேச்சு சூப்பர் ஸ்டாரை நேரடியாக தாக்குவதாக விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வரும் நிலையில் அதற்கு எதிராக ரஜினி காந்த் பேன்ஸ்  தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார்கள்.




Advertisement

Advertisement