• Oct 26 2024

ஹீரோயின் ஆகிறாரா அனிதாசம்பத். ஜோடியாக நடிப்பது பாடலாசிரியரா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

செய்தி வாசிப்பாளர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் அனிதா சம்பத் சீரியல் நாயகி ஆக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக பிரபல பாடலாசிரியர் ஒருவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது என்பது தெரிந்தது.

பிக் பாஸ் பிரபலத்தை வைத்து அவருக்கு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் தற்போது அவர் ஒரு சீரியலில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் அந்த சீரியல் டைட்டில் ’பவித்ரா’  என்றும் கூறப்படுகிறது.


கலைஞர் தொலைக்காட்சிகளில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாகவும் இந்த சீரியலை ’யாரடி நீ மோகினி’ ’நினைத்தாலே இனிக்கும்’ உள்ளிட்ட சில சீரியல்களை இயக்கிய பிரியன் என்பவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சீரியலில் அனிதா சம்பத் ஜோடியாக பிரபல பாடலாசிரியர் சினேகன் நடிக்க இருப்பதாகவும் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலைஞர் தொலைக்காட்சி விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement