தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க, ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். கிட்டத்தட்ட பலரின் இரண்டு வருடம் முயற்சிக்குப் பிறகு இந்த படம் கடந்த நவம்ப ர் 14ஆம் தேதி வெளியாகியிருந்தது.
கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனாலும் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்தது. தமிழ் சினிமாவில் முதன்முதலாக 3டி தொழில்நுட்பத்தில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
d_i_a
இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். இது சூர்யாவின் 45 ஆவது படமாக காணப்படுகின்றது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற தகவலும் ஏற்கனவே வெளியானது.
சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கோவையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தில் ரப்பர் பந்து புகழான ஸ்வஸ்விகா நடிக்கவுள்ளார். மேலும் த்ரிஷாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், RJ பாலாஜி இயக்கும் சூர்யாவின் 45 வது படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனாலும் அவர் விலகி உள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 45வது படத்திற்கு ஒளிப்பதிவாளர் அறிவிப்பு தொடர்பான போஸ்டரில் ஏ. ஆர் ரகுமானின் பெயர் இடம் பெறாததும் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. மேலும் புதிய இசை அமைப்பாளர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!