விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்து இறுதி அத்தியாயத்தை நோக்கி பயணித்து வருகின்றது . வழமையாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் முதலாவது வாரத்திலேயே சுவாரஸ்யம் காணப்படும். ஆனால் இந்த சீசன் மட்டும் சலிப்பை ஏற்படுத்தும் வகையில் கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களைக் கடந்து சூடு பிடித்துள்ளது.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒரு மாதத்திற்கு பிறகு வைல்ட் கார்ட் என்ட்ரியாக ஆறு பேர் உள்ளே நுழைந்தார்கள். இவர்கள் நுழைந்த பிறகு சரி ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் ரசிகர்களை வெறுப்பேற்றும் வகையிலேயே விளையாடி வந்தார்கள்.
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து முதன்முதலாக ரவீந்தர் வெளியேறினார். அதை தொடர்ந்து அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா தியாகராஜன், சிவகுமார், வர்ஷினி ஆகியோரும் நேற்றைய தினம் ஆனந்தியும் சாச்சனாவும் வெளியேறி இருந்தார்கள்.
d_i_a
இந்த நிலையில்,பி இக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சாச்சனா வெளியேறிய பின் முத்துக்குமரன் எமோஷனலான காட்சிகள் தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி சாச்சனா இறுதியாக செல்லும்போது முத்துக்குமரனிடம் நான் எவ்வளவுதான் உன்னிடம் நெருங்கி நெருங்கி வந்தாலும் நீ எட்டி எட்டி உதைக்கிறாய் அண்ணா.. ஆனா நீ நல்லா விளையாட வேண்டும்..
மூன்று கிழமையா உனது ஆட்டத்தை சரியாக கவனிக்கவில்லை. நீ நன்றாக விளையாட வேண்டும் என்று அவருக்கு ஒரு கிப்டையும் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார்.
இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாச்சனா பற்றி சக போட்டியார்களுடன் பேசிய முத்துக்குமரன், ரொம்பவும் எமோஷனல் ஆகியுள்ளார். மேலும் அங்கிருந்த தீபக் தான் சாச்சனாவை நாமினேஷன் பண்ணினது தொடர்பில் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
Listen News!