• Dec 26 2024

பவதாரிணி ஏஐ குரலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவி செய்தாரா? ‘கோட்’ படத்தின் வெளிவராத ரகசியம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் 'சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த மெலடி பாடல் முதல் முறை கேட்கும் போதே ரசிகர்கள் மனதை கவர்ந்தது என்பதும் இந்த பாடல் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா பாடியிருக்க இவர்களுடன் மறைந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடி இருந்தார் என்பதும் அவரது குரல் ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் பவதாரிணி குரலை பயன்படுத்துவதற்கு ஏஆர் ரகுமான் உதவி செய்துள்ளார் என்ற தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் ஏஆர் ரகுமான், ‘லால் சலாம்’ படத்தில் பம்பா பாக்யா மற்றும் சாகுல் அமீது ஆகியோர் குரல்களை ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்திய நிலையில், யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏஐ டெக்னாலஜி மூலம் குரல் உருமாற்றம் செய்யும் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்ததாகவும் ஏஆர் ரகுமானுடன் பணிபுரிந்த கிருஷ்ணன் சேட்டன் என்பவர்தான் அந்த நிறுவனத்தை வைத்துள்ளதால் ஏ ஆர் ரகுமானுக்காக உடனடியாக பவதாரிணி குரலை அவர் மறு உருவாக்கம் செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி கிருஷ்ணன் சேட்டா இன்னும் பல மறைந்த பிரபலங்களின் குரலை பயன்படுத்தி பாடல்களை மறு உருவாக்கம் செய்யப் போவதாகவும் முறைப்படி மறைந்த கலைஞர்களின் குடும்பத்திற்கு சன்மானம் கொடுத்து, அவர்களது அனுமதி பெற்று இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement