நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிள் ரிக்சா உடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. குறிப்பாக இந்த கிளாமர் உடையில் தயவுசெய்து சைக்கிள் ரிக்சா ஓட்டாதீர்கள் என்றும் அப்படி ஓட்டினால் சாலையில் உள்ளவர்கள் எல்லாம் உங்களைத்தான் பார்ப்பார்கள், பெரும் விபத்து நடக்கும் என்றும் காமெடியாக எச்சரித்துள்ளனர்.
பிரபல நடிகை மாளவிகா மோகனன், ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ விக்ரம் நடித்த ’தங்கலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள மாளவிகா மோகனன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் சில புகைப்படங்கள் அத்துமீறி ஓவர் கிளாமராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது தோழியுடன் சைக்கிள் ரிக்சா அருகே எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு தான் ஏராளமான கமெண்ட் பதிவாகி வருகிறது. இப்படி கிளாமர் உடையில் ஒருவர் சைக்கிள் ரிக்சா ஓட்டினால் அந்த சைக்கிள் ரிக்சாவுக்கு நான் ரெகுலர் கஸ்டமர் ஆகி விடுவேன் என்று ஒருவரும், இப்படி உடை அணிந்து சைக்கிள் ரிக்சா ஓட்டினால் சாலையில் விபத்துக்கள் அதிகரிக்கும் என்றும் காமெடியான கமெண்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தோழியுடன் வெளிநாடு சென்ற போது எடுத்தது என்று மாளவிகா மோகனன் கேப்ஷனாக பதிவு செய்து உள்ள நிலையில் கேர்ள் பிரண்ட் இல்லாமல் எப்படி இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!