• Dec 26 2024

அவசரத்துல மொத்த குடும்பமும் ஒன்னா சேர்ந்துட்டேன்னு தப்பு கணக்கு போட்டிங்களா? இது தான் புது ட்விஸ்ட்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் காணப்படுகிறது.  

சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டராக முத்து, மீனா கதாபாத்திரங்கள் காணப்படுகிறது. இதை அடுத்து கொடுமைக்கார மாமியாராக விஜயா கேரக்டரும் இந்த சீரியலை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல உறுதுணையாக உள்ளார்.

தனது வீட்டுக்கு வந்த மருமகள்களை வேறுபாடு பார்ப்பது மட்டுமில்லாமல், தான் பெத்த சொந்த பிள்ளைகளிலும் வேறுபாடு பார்க்கும் ஒரு கேரக்டராக காணப்படுகிறார் விஜயா.


அதன்படி தனது மூத்த பையன் மனோஜ் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்காமல் அவரை ஆதரித்து செல்ல பிள்ளையாக வளர்த்து வரும் விஜயா, கஷ்டப்பட்டு தனது உழைப்பால் முன்னுக்கு வரும் முத்துவை ஒருபோதும் தட்டிக் கொடுத்ததில்லை. மாறாக அவரையும் அவரது மனைவி மீனாவையும் தினமும் அசிங்கப்படுத்தும் நோக்கிலேயே செயற்படுவார்.


இதைத் தொடர்ந்து தான் பார்த்த பணக்கார மருமகள் என ரோகிணியை பெருமையாக பேசி வந்த இவர் தற்போது, ரோகிணிக்கும் தனது உண்மையான முகத்தை காட்டி உள்ளார்.


மொத்தத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் சற்று விறுவிறுப்பாக நகர்வதற்கு விஜயாவும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக காணப்படுகிறார்.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வலம் வருகின்றன.

அதன்படி இந்த சீரியலில் பூனையும் எலியுமாக, போட்டி பொறாமைக்கு செயல்படும் மூன்று ஜோடிகளும், குறித்த புகைப்படத்தில் செம சந்தோஷமாக போஸ் கொடுத்துள்ளனர். 

இதை பார்த்த ரசிகர்கள், இப்படியே சீரியலிலும் சந்தோசமாக, ஒற்றுமையாக வாழ பழகுங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement