• Dec 26 2024

பிக்பாஸ் சீசன் 7 கிராண்ட் பினாலேவுக்கு தகுதியான ஹவுஸ்மேடஸ் இவங்களா?- வைரலாகும் வீடியோ -என்ன கொடுமைடா இது?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 7ம் சீசனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் வைல்டு கார்டு என்ட்ரியாக ஐந்து புதிய போட்டியாளர்களை உள்ளே அனுப்பினார்கள். ஆனால் அடுத்த வாரமே அன்னபாரதி வெளியேற்றப்பட்டார்.

மீதம் இருக்கும் போட்டியாளர்களில் அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கானா பாலா மற்றும் பிராவோ ஆகியோர் பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றே நெட்டிசங்கள் விமர்சித்து வருகின்றனர்.


மேலும் இந்த வாரம் கானா பாலா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த போட்டியாளர்கள் தொடர்ந்து எலிமினேட் ஆகி வருவதால், பழைய போட்டியாளர்கள் மிக்ஸர் சாப்பிட்டாலும் எலிமினேஷனில் இருந்து தப்பி வருகிறார்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் அக்ஷாவும் விக்ரமும் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அக்ஷயா தான் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளது என்று சொல்ல, அதற்கு விக்ரம் அதற்கு வாய்ப்பு இல்லை. நீயூம் நானும் தான் பைனல் ஸ்ரேஜில் நிற்போம் என்று கூறுகின்றார். இந்த வீடியோ வைரலாகி வருவதால் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement