• Dec 25 2024

சின்னத்திரையில் விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் இவங்களா? வெளியான சுவாரஸ்ய தகவல்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் காரணமாகவே பெரும்பாலான ரசிகர்கள் இதற்கு அடிமையாக காணப்படுகிறார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ஒவ்வொரு கேரக்டருக்குமே ஒவ்வொரு  கதை, ஒவ்வொரு குணாதிசயம் என சிறப்பாக நகர்ந்து வருகிறது இதன் கதைக்களம். 

அதுமட்டும் இன்றி இந்த சீரியலில் நடிக்கும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு எபிசோட்டிலும் யாரும் விடுபடாத வண்ணம் இந்த சீரியல் வெகுவாக ரசிகர்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளது.


சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களாக முத்து மற்றும் மீனா கதாபாத்திரங்கள் காணப்படுகின்றது. இதை தொடர்ந்து ரோகிணி கதாபாத்திரமும் மனோஜின் கதாபாத்திரமும் காணப்படுகிறது. எல்லாத்துக்கும் மேலாக இந்த சீரியலை ஆட்டிப்  படைக்கும் நாயகியாக விஜயா காணப்படுகிறார்.


இந்த நிலையில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் முத்துவும் ரோகினியும் வெள்ளித்திரை பிரபலங்களான விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் போல உள்ளதாக பேசப்படுகிறது.


அதாவது தற்போது பிரபல நடிகராக காணப்படும் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் இணைந்து நடித்த படம் தான் பீட்சா. இதை தொடர்ந்தும் அவர்கள் ஒன்றாக படம் நடித்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் முத்து நடிகர் விஜய் சேதுபதி போல் காணப்படுவதாகவும் ரோகிணி நடிகை ரம்யா நம்பீசன் போல உள்ளதாகவும் ரசிகர்கள் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement