• Dec 26 2024

திடீரென தேவதையான பிக் பாஸ் பிரபலம்! டென்ஷன் ஆகாத ரசிகர்கள்.. சூப்பர் போட்டோஸ்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

இலங்கையின் பிரபல நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய லொஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது இவரது தந்தை உள்ளே சென்று, உன்னை இப்படியா வளர்த்தேன்? என கவின் பிரச்சினையில் பேசியிருந்தார். அது தற்போது வரையில்  பேசப்பட்டே வருகின்றது. ஆனாலும் அவரது தந்தை ஒரு சில நாட்களிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து ஒரு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. அதன்படி பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிதளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை. தோல்வியை தான் தழுவின.


இதை அடுத்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் கிளாமராக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 


இந்த நிலையில் தற்போது வெள்ளை ஆடையில் பிக் பாஸ் புகழ் லொஸ்லியா ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

இதேவேளை, இதுவரையில் லொஸ்லியா ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டதில் ரசிகர்கள் டென்ஷன் ஆகி அவருக்கு நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்தனர். தற்போது வெளியிட்ட புகைப் படங்களை பாராட்டி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement