• Dec 26 2024

அமீரையும் கொலை செய்யப் போகிறீர்களா? உண்மையை உளறிய பவானி!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

பாசமலர், சின்னதம்பி என சில சீரியல்களே நடித்து மிகவும் பிரபலமானவர் பாவனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அமீருடன் சேர்ந்து பேசப்பட்டார். நிகழ்ச்சியில் எதுவும் இல்லை என்று கூறிவந்த இவர்கள் வெளியே வந்தபின் காதலிக்க தொடங்கியுள்ளார்கள், ரசிகர்களுக்கும் அறிவித்தார்கள். தற்போது லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்துவரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள்.


திருமணம் பற்றி அறிவித்த கையோடு பாவனி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், என்னை விரும்புவர்களுக்கு நான் அதிகமான அன்பை கொடுப்பேன், என்னைப் பற்றி யோசிப்பதை விட அவர்களுக்காக யோசித்து நிறைய விஷயங்கள் செய்வேன். எனது முன்னாள் கணவர் தற்கொலை செய்து கொண்டதை குறிப்பிட்டு நான் தான் அவரை கொலை செய்தேன் என்றெல்லாம் கமெண்ட் செய்தார்கள். 


இப்போது நான் அமீருடன் இருக்கும் பொழுது கூட அடுத்ததாக அமீரை கொலை செய்யப் போகிறீர்களா என்று கேட்கிறார்கள். எனது முன்னாள் கணவரும் நானும் எத்தனை வருடங்கள் காதலித்தோம், எந்த மாதிரி அன்பை வெளிப்படுத்திக்கொண்டோம் என யாருக்கும் தெரியாது.இதுபோன்ற விஷயங்களை நான் பேசும்போது எனக்கு அழுகை வந்துவிடும், பொது வெளியில் நான் அழாமல் இருக்கலாம், ஆனால் தனியாக சென்று அழுதுவிட்டு தான் வருவேன் என எமோஷ்னலாக பேசியுள்ளார் பவனி ரெட்டி.

Advertisement

Advertisement