சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் ரோகிணி தான் எல்லா ஐடியாவும் கொடுத்தா என்று சொன்னதும், ஏன் இப்படி பண்ணினாய் என்று விஜயா ரோகினிக்கு அறைகின்றார். அதற்கு ரோகிணி எல்லாம் மனோஜுக்காக தான் பண்ணினேன் என்று சொல்லுகிறார்.
மேலும் மனோஜ் படித்து பல பட்டம் வைத்திருந்தாலும் அதை வைத்து ஒன்றும் செய்யவில்லை, வெட்டியாக தான் இருந்தார். நீங்களும் அவருக்கு ஒன்றும் செய்யவில்லை. அதனால் தான் அந்த காசை வைத்து கடை திறந்து கொடுத்தேன் என்று சொல்கின்றார்.
இதை கேட்ட விஜயா நான் எனது பையனுக்கு ஒன்றும் செய்யவில்லையா என்று மீண்டும் அறைகின்றார். ஆனால் மனோஜ் எந்தவித சத்தமும் இன்றி பேசாமல் நிற்கின்றார். அதன் பின் அண்ணாமலை அவரை தடுத்து ரோகிணியை ரூமுக்குள் போகுமாறு சொல்லுகின்றார். மனோஜும் பின்னாலே போக அவரை தனியாக இருக்குமாறு விஜயா மிரட்டி விட்டு செல்கிறார்.
இதை தொடர்ந்து கிச்சனுக்குள் முத்து, ரவி, ஸ்ருதி மற்றும் மீனா இந்த விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அதனை மனோஜ் கேட்கிறார். இதன்போது முத்து, மனோஜை விட ரோகிணி தான் கேடி.. ஆனால் ஜீவாவும் மனோஜை விட்டுப் போயிட்டாள்.. ரோகிணியும் இவன் வேலைக்கு ஆகாத முட்டாள் என்று சொல்லிட்டா என்று சொன்னதை கேட்கின்றார்.
இறுதியாக ரோகிணியிடம் செல்ல, ரோகிணி அவர் மீது கோபப்பட்டு நீ எனக்கு ஒரு சப்போட்டா கூட இல்ல, இதுதான் நல்ல புருஷனுக்கு அழகா? என்று கேட்க, நீ என்னை முட்டாள் போல பேசினது எனக்கு மிகவும் மனக் கஷ்டமா இருந்தது.
நீ அப்படி பேசி இருக்கக் கூடாது என்று சொல்லவும் உண்மையத்தானே சொன்னேன் நீ என்னை கல்யாணம் கட்ட முதலும் பின்னரும் வெட்டியா தானே இருந்தா என ரோகினி பதிலடி கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!