• Dec 26 2024

அடேங்கப்பா! நடிகை சோனியா அகர்வாலா இது? 42 வயதிலும் செம ஸ்லிம்மாக இருக்காங்களே!!!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

"காதல் கொண்டேன்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சோனியா அகர்வால். இந்த படத்தின் மூலம் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதனைத் தொடர்ந்து சோனியா அகர்வால் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில், மதுர, திருட்டு பயலே  என பல படங்களில் நடித்துள்ளார். 


இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2010ஆம் ஆண்டே விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து சோனியா அகர்வாலுக்கு சரியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.


40 வயது நிறைந்த அவர் தற்போது உடல் எடை குறைந்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் சோனியா அகர்வாலா இது என வாயடைத்துப் போயுள்ளனர்.


Advertisement

Advertisement