• Dec 26 2024

அடேங்கப்பா..!! இரண்டு வருடங்களைக் கடந்த கொண்டாட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல்! ஆஜரான மொத்த பிரபலங்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவி தொலைக்காட்சியில் மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து, விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் கனிகா, சக்தி, பிரியா, பிரியதர்ஷினி, ஹாரப்பிரியா, சபரி, பிரசாந்த், மதுமிதா, வேல ராமமூர்த்தி என்று  ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல் நடிக்கும் அனைவரின் நடிப்பும் கொஞ்சம் வெகுலியாக இருந்தாலும் ,சில சமயங்களில் நகைச்சுவையாகவும் மிரட்டல் ஆகவும் நடித்து இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.


எதிர்நீச்சல்  சீரியலில் பல திருப்பு முனைகளும் அடுத்தடுத்து நகர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம் அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தான்.

இதில் தற்போது கதைக்களமே முற்றிலும் மாறுபட்ட வகையில் பெண்கள் எதையும் சாதிக்க துணிந்துள்ளனர். 

அதுபோலவே, ஆதி குணசேகரின் சகோதரர்களும் அவரின் உண்மை முகம் தெரிந்து அவருக்கு எதிராக திரும்பி உள்ளார்கள். இவ்வாறு, தற்போது தான் எதிர்நீச்சல் சீரியல் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில். எதிர்நீச்சல் சீரியல் தனது இரண்டாவது வருட பூர்த்தியை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.


Advertisement

Advertisement