• Dec 26 2024

‘AV 36’ மீண்டும் பிளாக் பாஸ்டர் ஹிட்டடிக்க தயாரான அருண் விஜய்! யார் யார் ஹீரோயின்ஸ் தெரியுமா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'முறை மாப்பிள்ளை' என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் அருண் விஜய். இவர் பாண்டவர் பூமி, இயற்கை, மலை மலை, தடையறத்தாக்க ஆகிய படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இதை தொடர்ந்து அஜித்துடன் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.அதன் பின்னர் தடம், செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்து நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றார்.


அருண் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான 'மிஷன் சாப்டர் 1' என்ற படமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது.

தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து  முடித்துள்ளார் அருண் விஜய். அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இவர் நடித்துள்ள பார்டர் படமும் வெளியாவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில், அருண் விஜய்யின் 36 ஆவது படம் பற்றிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அது தொடர்பிலான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி அருண் விஜயின் 36 ஆவது படத்தை திருக்குமரன் இயக்க, அதனை ரவிச்சந்திரன் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் பிரமாண்டமான பொருட்செலவில் ஆக்சன் படமாக உருவாகியுள்ளதோடு, இது அருண் விஜய்க்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சித்தி இத்னானி மற்றும் தன்யா ஆகியோர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement