• Dec 26 2024

நஷ்ட ஈடா கேட்குற? த்ரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுக்க திமுகவில் சேரும் ஏ.வி.ராஜூ?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இதற்கு திரை உலகினர் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

 இந்த நிலையில் நேற்று திடீரென நடிகை த்ரிஷா, ஏவி ராஜு என்பவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதில் ’ஊடகங்கள் முன்னிலையில் ஏவி ராஜு நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றும் அது மட்டுமின்றி நஷ்ட ஈடும் ஒரு பெரும் தொகையாக கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதுவரை த்ரிஷாவின் இந்த நோட்டீஸ்க்கு பதில் அளிக்காத ஏவி ராஜு தற்போது அதிரடியாக திமுகவின் சேர இருப்பதாக கூறப்படுகிறது. உதயநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்து விட்டால் த்ரிஷாவிடம் இருந்து வரும் சட்டரீதியான பிரச்சனையை எளிதில் சமாளித்து விடலாம் என்றும் த்ரிஷா உள்பட திரை உலகினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த விஷயத்தில் அடக்கி வாசிப்பார்கள் என்றும் ஏவி ராஜு யோசிப்பதாக கூறப்படுகிறது.



ஆனால் அதே நேரத்தில் திமுக அவரை சேர்த்துக் கொள்ளுமா?  தனது சக நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை திமுகவில் சேர்க்க உதயநிதி ஒப்புக்கொள்வாரா என்பதெல்லாம் கேள்விக்குறிதான். ஆனால் த்ரிஷாவை இப்போதைக்கு அடக்கி வைக்காத திமுகவில் சேர போவதாக தனது ஆதரவாளர்கள் மூலம் வதந்தியை சமூக வலைதளங்கள் மூலம் ஏவி ராஜூ கிளப்பி விடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் எங்கே போய் முடியும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement