• Dec 26 2024

திடீரென கோபிக்கு சர்ப்போட் பண்ணிப் பேசிய பழனிச்சாமி- அமிர்தாவின் கணவரால் அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா- Baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா பழனிச்சாமியை அழைத்து ஹொட்டல் ஒன்றில் சந்திக்கின்றார். அப்போது பழனிச்சாமி என் தான் நாங்க நண்பர்களாக இருந்தாலும் அடிக்கடி இப்படி சந்தித்து பேசுவது தவறு, அண்டைக்கு அவர் அப்பிடிப் பேசிற மாதிரி சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தது தன் தப்பு தான் என்று சொல்ல பாக்கியா கோபி பண்ணினது தான் தப்பு என்கின்றார்.


மறுபுறம் கோபி தன்னுடைய நண்பனிடம் பாக்கியா தன்னை வீட்டை விட்டு துரத்திய விஷயத்தையும் அதற்கு ராதிகாவும் சேர்ந்து சர்ப்போட் பண்ணிய விஷயத்தையும் சொல்கின்றார். இதைக் கேட்ட நண்பன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கின்றார்.அத்தோடு தன்னுடைய வாங்கிய பணத்தை இன்னும் ஏன் தரவில்லை என்றும் கோபியை நக்கலடிக்கின்றார்.

தொடர்ந்து பாக்கியா பைக்கில் வரும் போது ஒருவர்பைக்கில் வந்து வழிமறிப்பதால் பாக்கியா பயந்து போய் திருடன் என நினைத்து கழுத்தில் போட்டிருக்கும் செயினை இறுகப் பிடிக்கின்றார். அப்போது அந்த நபர் இறங்கி கெல்மட் மற்றும் மஸ்கைக் கழட்டும் போது அது அமிர்தாவின் முன்னாள் கணவர் என்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.


பைக்கை விட்டு இறங்கிய கணேஷ் பாக்கியாவிடம் உங்களுக்கு தந்த 30 நாட்களில் 18 நாட்கள் முடிந்து விட்டது.இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளது. அதுக்குள்ள நீங்க உண்மையைச் சொல்லி அமிர்தாவை என்கூட அனுப்பி வைக்கல என்றால் நானே வந்து எல்லா உண்மையையும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகின்றார்.


தொடர்ந்து கான்டீன் கண்காட்சி நிறுத்தப்பட்டதால் பாக்கியா தனக்கு ஆடர் தந்தவரிடம் பணத்தை திரும்பத் தருமாறு கேட்கின்றார். ஆனால் அவர் பணத்தை திரும்ப தரமுடியாது. நஷ்டம் வந்தாலும் நீங்க தான் பார்த்துக்கனும் என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement