• Dec 25 2024

கமலாவை வீட்டைவிட்டு துரத்திய பாக்கியா.. சைலன்ட்டா கோபி பார்த்த வேலை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியா பேசியதை நினைத்து ராதிகா அழுது கொண்டிருக்க அப்பொழுது கோபி வருகின்றார். கமலா நடந்தவற்றை சொல்ல, இனியா அப்படி செய்திருக்க மாட்டார் என்றும், தான் போய் பார்த்து பேசுவதாக கிளம்பி செல்கின்றார். இதனால் உனக்கு ஆறுதல் சொல்லாமல் அங்க போகின்றார் என்று கமலா ராதிகாவுக்கு சொல்லுகின்றார்.

இதைத் தொடர்ந்து பாக்யா வீட்டுக்கு போன கோபி இனியாவுடன் பேச வேண்டும் என்று தன்மையாக கேட்டு, ஈஸ்வரியிடமும் பாக்கியாவிடமும் சொல்லிவிட்டு இனியாவை காரில் ஏற்றி செல்கின்றார். இதை பார்த்த கமலா நேரே பாக்யா வீட்டுக்குச் சென்று இனியா பேசியவை பற்றி போட்டுக் கொடுக்கிறார்.

d_i_a

மேலும் ஈஸ்வரியை பச்சோந்தி என்றும் அப்போ மகன் இல்லை என்று சொல்லிவிட்டு இப்போ உங்களுடைய மகன் என்று கொண்டாடுறீங்களா என்று விளாசுகிறார். இதனால் ஈஸ்வரி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள முதல் வெளியே போய்விடுமாறு சொல்லுகின்றார். அவரை பாக்கியாவும் பிரச்சனை பண்ணாமல் வெளியே போகுமாறு சொல்லுகின்றார்.


அதன் பின்பு வீட்டுக்கு வந்த கமலாவிடம் தான் கோபியை கல்யாணம் பண்ணி இருக்க கூடாது என்று ராதிகா அழுகின்றார். தன்னால் மையூவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லுகின்றார். மேலும் தான் இனி எதிலும் தலையிடப் போவதில்லை என்று எழுந்து செல்கின்றார்.

இறுதியாக கோபி இனியாவை காரில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது தனது காலேஜில் இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லி அழுகின்றார் இனியா. இதனால் கோபி நானும் அந்த நேரத்தில் அப்படி சண்டை போட்டிருக்கக் கூடாது என்று சொல்லி மன்னிப்பு கேட்கின்றார். இதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement