• Dec 25 2024

கிரியேட்டிவாக கொடுக்கப்பட்ட நாமினேஷன் டாஸ்க்.. கசக்கி தூக்கி வீசப்பட்ட சாச்சனா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தின் முடிவில் மேலும் 6 போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டுக்குள் வந்தார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை ஆண்கள், பெண்கள் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த முறை சுவாரஸ்யமாக இல்லை என்ற அளவுக்கு விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணத்தினால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 50 ஆவது நாளான நேற்றைய தினம் இரு அணிகளுக்கு இடையே போடப்பட்ட கோடு எடுக்கப்பட்டு இனி ஒரே அணியாக விளையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

d_i_a

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் புதிதாக நாமினேஷன் செய்வதற்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது குறித்த ப்ரோமோ வைரல் ஆகி வருகின்றது.


 அதன்படி முதலாவது ஆக தீபக்  சாச்சனாவின் புகைப்படத்திற்கு கோடு போட்டு இதுக்கு மேல எல்லாம் அவங்கள பார்த்துகிட்டு வச்சு விளையாட முடியாது என்று  அவரின் புகைப்படத்தை தூக்கி வீசுகின்றார். அதன் பின்பு ஜெஃப்ரி ஆனந்தியையும், ரஞ்சித்தும் ஆனந்தி போய் பேசுவதாக நாமினேஷன் செய்கிறார்.

மேலும் தர்ஷிகா சத்யாவின் புகைப்படத்தை நாமினேஷன் செய்து இவர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை என்று சொல்கின்றார். இவ்வாறு ஒருவரை ஒருவர் நாமினேஷன் செய்து அவர்களின் புகைப்படத்தை தூக்கி வெளியே வீசுகின்றார்கள். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement