• Dec 26 2024

ஈஸ்வரியின் வாயை அடக்கிய பாக்கியா.. கன்றாவி என திட்டிய எழில்! வீட்டை விட்டு வெளியேறுவாரா கோபி?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ராதிகா அம்மா வீட்டுக்கு சென்று இருக்க, அங்கு மையூ வருகிறார். அவரிடம் குட்டி பாப்பா வந்தா சந்தோசப்படுவியா என கேட்க, ஆமா ரொம்ப சந்தோசப்படுவேன், ஜாலியா இருக்கும் என சொல்கிறார்.

இதை அடுத்து வீட்டுக்கு வந்த ராதிகா, பாக்கியாவும் எழிலும் கிச்சனில் ஊறுகாய் செய்து கொண்டு இருக்க, அதை பார்த்து பார்த்து வாய் உருகிறார். அதன்பின் பாக்கியாவிடம் கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். 

இதையடுத்து, ராதிகா இப்ப வாந்தியை காரணம் காட்டி சமைக்கிறது இல்ல, வேளைக்கு போறது இல்ல அதனால கோபிக்கு கொஞ்சம் சமைச்சி கொடுக்கிறீயா என ஈஸ்வரி கேட்க, முடியாது அத்தை. அவரை இந்த வீட்டுல வச்சி இருக்கிறதே உங்களுக்காக தான் என்று சத்தம் போட, ஈஸ்வரி நைசாக சென்று விடுகிறார். 


மறுபக்கம் எழிலும், செழியனும் பேசிக் கொண்டு இருக்க, அங்கு சென்ற கோபி நைசாக தனது விஷயத்தை பேசுகிறார். பாட்டி ஏன் உன் கூட கதைக்கிறது இல்லை என்று எழிலிடம் கேட்க, குழந்தை பெற்றுக்கொள்ளு என்று கட்டாயப்படுத்துறாங்க என்று சொல்ல, அதற்கு கோபி உடனே யோசித்து விட்டு இப்போதைக்கு எதுக்கு குழந்தை இன்னும் ரெண்டு வருஷம் நாலு வருஷம் எடுத்துக் கொள்ளு. நான் எங்க அம்மா கிட்ட பேசுறேன் என்று சொல்கிறார். 

மேலும் தனது நண்பர் ஒருவருக்கு இப்பதான் குழந்தை பிறந்தது. ஆனால் அவளுக்கு மகள் இருக்கு காலேஜ் படிக்குது என்று சொல்ல, செழியனும் எழிலும் என்னடா இது கன்றாவியான குடும்பம் என திட்டுகிறார்கள். இதனால் தனது விஷயத்தை சொல்லாமல் பல்பு வாங்கி வருகிறார் கோபி.

இதை தொடர்ந்து ராதிகா என்ன செய்யப் போறீங்க வீட்ல சொல்லலையா என கேட்டு, அப்படி இல்லை என்றால் நாங்கள் விஷயத்தை சொல்லி விட்டு தனியா வேற எங்கையும் போவோம் என ஐடியா கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்

Advertisement

Advertisement