• Dec 27 2024

பெங்களூர் டேஸ்' திரைப்பட இயக்குநர் அஞ்சலி மேனன்! மீண்டும் தமிழில் இயக்கும் திரைப்பம்! new update இதோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

ஒரு சில படங்களே இயக்கி மிகக் குறுகிய காலத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அஞ்சலி மேனன். மலையாள படங்கள் மூலம் மலையாள ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவர், 'பெங்களூர் டேஸ்' படம் மூலம் இந்திய அளவிலும் கவனம் பெற்றார்.


இப்படம் தமிழில், 'பெங்களூர் நாட்கள்' என ரீமேக் செய்யப்பட்டது. இவர் இயக்கிய 'ஒண்டெர் வுமென்' பெண்களின் பிரச்னைகளைப் பேசி பாராட்டுகளைப் பெற்றிருந்தது.


இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அஞ்சலி, தனது அடுத்த படம் தமிழ்ப் படமாக இருக்கும் என்றும் இதை 'KRG' தயாரிப்பு நிறுவனத்துடன் தயாரிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், "நமது கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த படத்தை எடுக்கவுள்ளேன். 


இந்தியாவில் பல்வேறு நிலப்பரப்புகளின் கதைகள் இருக்கின்றன. அக்கதைகள் திரையில் வரும்போது பார்வையாளர்கள் அதை மொழிகளைக் கடந்து ரசிக்கிறார்கள். அப்படியோரு நல்ல திரை அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும் நினைக்கிறேன்" என்று கூறினார்.


Advertisement

Advertisement