• Dec 25 2024

பார்த்திபனுக்கு 10 காதலிகள்.. சீதாவை பிரிந்ததற்கு இதுதான் காரணமா? பயில்வான் பற்ற வைத்த நெருப்பு..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும்  இயக்குனர் பார்த்திபனுக்கு 10 காதலிகள் இருந்ததாகவும் நடிகை சீதாவை அவர் பிரிந்ததற்கு என்ன காரணம் என்பது எனக்கு தெரியும் என்றும் அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பார்த்திபன் இயக்கிய ’டீன்ஸ்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் அவரைப் பற்றிய செய்திகள் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அவர் சீதாவை பிரிந்ததற்கான காரணத்தை கூறிய பேட்டி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை அவ்வப்போது கூறிவரும் பயில்வான் ரங்கநாதன் பார்த்திபன் குறித்தும் சில விஷயங்களை சமீபத்தில் தெரிவித்துள்ளார். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தபோது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் அவரை விட்டு பிரிந்து ’புதிய பாதை’ என்ற படத்தை இயக்கினார் என்றும் அந்த படத்தில் நடிக்க எந்த ஹீரோவும் முன்வரவில்லை என்பதை அடுத்து தான் அவரே ஹீரோவாக மாறினார் என்றும் தெரிவித்தார்.

மேலும் அந்த படத்தில் நாயகியாக நடித்த சீதாவுக்கும் பார்த்திபனுக்கும் காதல் ஏற்பட்டது என்பது அந்த காதல் திருமணத்தில் முடிந்தாலும், சீதா மீது பார்த்திபன் அதீதமாக காதல் வைத்ததால்தான் சீதாவை அவர் பிரிந்தார் என்றும் பயில்வான் ரங்கநாதன் பற்ற வைத்துள்ளார்.

மேலும் சீதாவை விட்டு பிரிந்த பின்னர் அவர் பல பெண்களை காதலித்தார் என்றும் ஆனால் முதலிலேயே அவர் யாரையும் திருமணம் செய்ய முடியாது என்று நிபந்தனை விதித்து விடுவார் என்றும் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 10 பெண்களுடன் பார்த்திபனுக்கு காதல் ஏற்பட்டதாகவும் சில பெண்கள் தங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்று கூறி விலகி விட்டார்கள் என்றும் சில பெண்கள் வேறு காரணங்களுக்காக அவரை விட்டு பிரிந்து விட்டார்கள் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.மேலும் இந்த வயதில் கூட பார்த்திபனுக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் கூறும் கருத்துக்களில் பெரும்பாலும் உண்மைத்தன்மை இருக்காது என்றும் பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்களை  தான் அவர் உண்மை போல பேசி வருகிறார் என்று கூறப்படும் நிலையில் இதுவும் அதேபோல் ஒரு வதந்தியா? அல்லது உண்மையா? என தெரியவில்லை.

இந்த நிலையில் பார்த்திபன் தனது ’டீன்ஸ்’ படத்தின் விளம்பர பணிகளில் பிஸியாக இருப்பதால் இது குறித்த சர்ச்சைகளுக்கு அவர் கருத்து தெரிவிக்காமல் மௌனமாக உள்ளார். ஒருவேளை படம் வெளியான பிறகு இதற்கு விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement