• Dec 25 2024

சம்பளம் தராமல் ஏமாத்துறாங்க.. இனி சினிமாவே எனக்கு வேண்டாம்.. பாலாஜி முருகதாஸ் விரக்தி..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் சம்பளம் தராமல் ஏமாற்றுகிறார்கள் என்றும், இனிமேல் எனக்கு சினிமாவே வேண்டாம் என்றும், சினிமா துறையில் இருந்து விலகப் போகிறேன் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ், இரண்டாவது இடத்தை பெற்றார் என்பதும், அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் பெற்றார் என்பதும் தெரிந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் பிரபலமானதால் அவருக்கு சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது என்பதும், ஒரு சில திரைப்படங்களின் தற்போது அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலாஜி, ரச்சிதா மகாலட்சுமி, சாக்சி அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ’ஃபயர்’ என்ற திரைப்படம் உருவாகி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. ஜே.எஸ்.கே சதீஷ்குமார் என்பவர் தயாரித்து இயக்கிய இந்த படம் குறித்து தான் தற்போது பாலாஜி முருகதாஸ் விரக்தியுடன் பேசி உள்ளார்.

 ’ஃபயர்’ திரைப்படத்தில் நடித்த எனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளமாக தயாரிப்பாளர் வழங்கவில்லை, எனவே இந்த படத்தில் இருந்து நான் விலகி விட்டேன், சினிமாவே எனக்கு தேவையில்லை,  என்று அவர் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் உடனே அவசரப்பட்டு முடிவு எடுக்காதீர்கள், ஒரு தயாரிப்பாளர் போல் எல்லோரும் இருக்க மாட்டார்கள், உங்களால் கண்டிப்பாக சினிமாவில் சாதிக்க முடியும், இந்த வலியை கடந்து மன உறுதியுடன் இருங்கள்’ என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் பாலாஜி சினிமாவில் இருந்து விலகப் போகிறேன் என்ற முடிவில் உறுதியுடன் இருப்பாரா? அல்லது ரசிகர்களுக்காக மீண்டும் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement