• Dec 26 2024

பவதாரிணி பெண் என்பதால் இசை-ல ஒதுக்கி வச்சாரு! இளையராஜாவின் முகத்திரையை கிழித்த பயில்வான்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக  காணப்படும் இளையராஜாவின் மகள் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்த நிலையில்,  புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் காலமானார் . இவருடைய இந்த திடீர் மறைவு ஒட்டு மொத்த திரையுலகையும் சோகத்தில் உறைய வைத்துள்ளது . 

பல பிரபலங்களும் மன இரங்கல் தெரிவித்து வந்துள்ளனர் . நல்ல முறையில் இறுதி கிரியைகளும் நிறைவேற்றப்பட்டு  நல்லடக்கம் செய்யப்பட்டது . 

இந் நிலையில்  பயில்வான் ரங்கநாதன்  ஒரு பேட்டியின் கண் கலங்கி பாடகி பவதாரணி பற்றி பேசியதை பார்க்கலாம் வாருங்கள் , 


"கார்த்திக் ராஜாவுக்கு தான் இளையராஜா நிறைய பயிற்சி கொடுத்தார் . இசையும் சொல்லி கொடுத்தார் . அதன் பிறகு யுவன் சங்கர் ராஜாவுக்கும் கொஞ்சம் பயிற்சி கொடுத்தார் .அனால்  பாவதாரணிக்கு இசை வேணாம் பெண் பிள்ளை தானே இசை உலகத்துக்கு வர வேண்டாம் என்று இளையராஜா நினைத்தார் . ஒரு பேட்டியின் போது பவதாரணி  கூறினார் . எங்க வீட்டில ஒரு இசை ஆக்கிரப்பு இருக்கும் . 

அப்பா , அண்ணா , தம்பி என்று எல்லோருமே இசை உலகத்தில் இருக்கும் போது எனக்கும் அந்த இசை மேல் இருக்கும் நாட்டம் தானாகவே வந்து விட்டது. அப்பா எனக்கு இசை பழக்கவில்லை என்று ஒரு மன உளைச்சல் இருந்தது . 

வீட்டில் சாப்பிட உட்கார இருந்தாலே எனக்கு சாப்பாடு இறங்காது . என்று சொல்லி இருக்கிறார் பவதாரணி . அந்த அளவுக்கு அவருக்கு இசை மேல ஒரு நாட்டம் இருந்தது . அப்பா  அண்ணா ,தம்பி  பையன்கள் என்றதால் இருவருக்கும் இசை கற்று கொடுத்தார் . தனக்கு கற்று கொடுக்கவில்லை என்ற சோகம் இருந்தாலும் கடவுள் ஆசி அவருக்கு இருந்து அவர் சாதனை படைத்தார் .

Advertisement

Advertisement