• Dec 26 2024

இந்தியாவின் மிகப்பெரிய நடிகரா சூரி? பெர்லின் திரைப்பட விழாவில் ஆச்சரியம் அடைந்த பார்வையாளர்கள்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சூரி நடித்த 'ஏழுகடல் ஏழு மலை’ மற்றும் ’கொட்டுக்காளி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை அடுத்து இந்த படங்களை பார்த்த பார்வையாளர்கள் இந்தியாவில் சூரி ஒரு மிகப்பெரிய நடிகரா? என்ற கேள்வியை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த நிலையில் ’வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தான் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து காமெடியனாக சுமார் 150 படங்களுக்கு மேல் நடித்து வந்த நிலையில் தற்போது தான் அவர் ஒரு சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். 



குறிப்பாக சூரி நடிப்பில் வெளியான ’விடுதலை’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் ‘கருடன்’ ’ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ’கொட்டுக்காளி’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

இந்த நிலையில் ராம் இயக்கத்தில் உருவான ’ஏழு கடல் ஏழு மலை’ என்ற படம் சமீபத்தில் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட போது சூரி கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனை அடுத்து அடுத்த நாளே சூரி நடித்த ’கொட்டுக்காளி’ திரைப்படமும் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை அடுத்து இந்தியாவிலிருந்து வந்த ஒரு நடிகரின் இரண்டு படங்கள் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது என்றால் இந்தியாவில் அவர் மிகப்பெரிய நடிகராக இருக்கும் என்று பலர் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

அதன் பின்னர் அவர்கள் சூரி குறித்து விசாரித்த போது தான் 150 படங்களுக்கு மேல் அவர் காமெடி நடிகராக நடித்திருந்ததாகவும் தற்போது தான் ஹீரோவாக நடித்து வருவதாகவும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ஒரு சில ஆண்டுகளிலேயே அவர் சர்வதேச அளவில் புகழ்பெறும் அளவுக்கு தரமான படங்களில் நடித்து வருவதையும் தெரிந்து கொண்டனர். இதனால் சூரி புகழ் இரண்டே படங்களால் உலகம் முழுவதும் பரவி இருப்பதை அடுத்து அவரது தரப்பினர் மகிழ்ச்சியாக உள்ளனர். 

இனிமேல் தரமான கதையை தேர்வு செய்து ஹீரோவாக மட்டுமே சூரி நடிப்பார் என்றும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி விருதுகளை பெறுவதே அவரது லட்சியம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement