• Dec 27 2024

’தக்ஃலைப்’ படத்தால் 3 கோடி நஷ்டமடைந்த ஐஸ்வர்யா லட்சுமி.. ஆனாலும் நம்பிக்கையுடன் காத்திருப்பு..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

’கட்டா குஸ்தி’ ’பொன்னியின் செல்வன்’ என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு தமிழ் திரை உலகில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில் அவர் எந்த வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் கமல்ஹாசனின் ’தக்ஃலைப்’ படத்திற்காகவே தனது முழு கால்ஷீட்டையும் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் திரையுலகில் ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதன் பிறகு ’ஜகமே தந்திரம்’ ’கேப்டன்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்த நிலையில் அவருக்கு பெரும் திருப்புமுனையை கொடுத்தது ’பொன்னியின் செல்வன்’ படம் தான். இந்த படத்தில் அவர் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்த நிலையில் இந்த கேரக்டர் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது




இதனை அடுத்து ’கட்டா குஸ்தி’ திரைப்படம் அவரை புகசின் உச்சத்தில் கொண்டு சென்ற நிலையில் அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவருக்கு தொடர்ச்சியாக மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மூன்று படங்களிலும் தலா ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் முன் வந்தனர். 

ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’தக்ஃலைப்’ படத்தின் கேரக்டர் தனக்கு பெரும் திருப்புமுனையை கொடுக்கும் என்பதால் மூன்று படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் ’தக்ஃலைப்’ படத்திற்காக முழு கால்ஷீட் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இந்த படம் ரிலீஸ் ஆனால் தனக்கு மிகப்பெரிய பிரேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐஸ்வர்யா லட்சுமி இருப்பதாகவும் அதன் பிறகு நயன்தாரா அல்லது த்ரிஷா எடுத்து அவர் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

எனவே மூன்று படங்களில் நடிக்காததால் மூன்று கோடி தனக்கு நஷ்டம் ஆனாலும் வருங்காலத்தில் தனக்கு அதிக படங்கள் கிடக்கும் என்ற நம்பிக்கையுடன் ஐஸ்வர்யா லட்சுமி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement