• Dec 26 2024

’கார்த்திகை தீபம்’ தொடரில் இணையும் ‘பாக்கியலட்சுமி’ நடிகை.. கார்த்திக்-அர்த்திகா வாழ்க்கையில் திருப்பம்?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’கார்த்திகை தீபம்’ தொடரில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த நடிகை இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து கார்த்திக்-அர்த்திகா  வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'கார்த்திகை தீபம்’ தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் இதனால் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த தொடரில் ஜெஃனிபர் என்பவர் புதிய கேரக்டரில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பாக்கியலட்சுமி’ தொடரில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்தவர் என்பதும் திருமணம் ஆகி குழந்தை பிறந்ததும் ’பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகியவர் தற்போது மீண்டும் ’கார்த்திகை தீபம்’ தொடரின் மூலம் ரீஎண்ட்ரி ஆகவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.



இந்த தகவலை ஜெனிஃபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ’கார்த்திகை தீபம்’ சீரியலில் நான் நடிக்கப் போகிறேன், ’பாக்கியலட்சுமி’ சீரியலில் எனது ராதிகா கேரக்டருக்கு எப்படி ஆதரவு கொடுத்தீர்களோ, அதே போல் இந்த தொடரில் நான் நடிக்க இருக்கும் ரம்யா கேரக்டருக்கும் உங்களது அன்பு மற்றும் ஆதரவு தேவை என்றும் இந்த அழகிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஜீ தமிழுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து அவர் ’கார்த்திகை தீபம்’ தொடரில் ரம்யா என்ற கேரக்டரில் ஜெனிஃபர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ’பாக்கியலட்சுமி’ தொடரில் ராதிகா கேரக்டரில் ஜெனிஃபரை மிஸ் செய்த ரசிகர்கள் தற்போது மீண்டும் வேறொரு தொடரில் அவர் ரீஎண்ட்ரி ஆனதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நிச்சயம் இந்த தொடரில் ரம்யா கேரக்டரில் அவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement