பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ற்கான கிராண்ட் பைனல் நாளைய தினம் நடைபெற உள்ளது. இதில் யார் இந்த சீசனுக்கான டைட்டிலை வெற்றி பெறப் போகின்றார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில், இறுதி கட்டத்தை நோக்கி அடி எடுத்து வைத்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ற்கான கிராண்ட் பைனல் தொடர்பில் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஒரு நீண்ட பயணத்தின் மாபெரும் வெற்றி விழா நாளைய தினம் பரபரப்பாக ஒளிபரப்பாக உள்ளது.
d_i_a
அதில் போட்டியாளர்கள் இதுவரை அனுபவித்த இன்ப துன்பங்கள், சந்தோசமான சம்பவங்கள் என்பன மீண்டும் ஒருமுறை நினைவூட்டும் வகையில் காட்டப்பட்டுள்ளது. மேலும் இதுவரை எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு போட்டியாளர்கள் நன்றி கூறிய எமோஷனல் வீடியோவும் பகிரப்பட்டுள்ளது.
எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டிற்கான கிராண்ட் பைனல் நாளை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் என்பதோடு, அதில் இறுதியாக முத்துக்குமரன், ரயான், சௌந்தர்யா, விஷால் மற்றும் பவித்ரா ஆகியோர் பைனலுக்கான போட்டியில் தேர்வாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!