• Dec 27 2024

சமந்தா ஸ்டைலுக்கு மாறிய பிக் பாஸ் ஜனனி.. தெறிக்கவிடும் போட்டோ ஷூட்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இலங்கைச் சேர்ந்த ஜனனி அங்கு செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் உணவுகளை ரிவ்யூ பண்ணி மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்பட்டார். அதன் பின்பு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதற்காக சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். டைட்டில் வின் பண்ண வில்லை என்றாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி ஜனனி நடித்த முதலாவது படமே இளையதளபதி விஜய் மற்றும் திரிஷா நடித்த லியோ படம் என்பதால் இவருக்கு இன்னும் மதிப்பு கூடியது.

இதுவரையில் பிக் பாஸ் ஜனனி என அழைக்கப்பட்டவர் லியோ படத்தில் நடித்த பிறகு லியோ ஜனனி என அழைக்கப்பட்டார். அதன் பிறகு ஆல்பம் சாங் ஒன்றின் பாடலில் பணியாற்றி இருந்தார். தற்போது வரையில் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.


சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி அடிக்கடி போட்டோ ஷூட் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் இவர் கிளாமரில் இறங்காமல் நாகரிகமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் செய்வர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில், தற்போது ஜனனி தனது தலை முடியை வெட்டி உள்ளதோடு புது பேஷனில் போட்டோ ஷூட் செய்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றன.

v

Advertisement

Advertisement