• Jan 16 2025

பிக்பாஸ் போட்ட பலே திட்டம்.. ஜாக்குலின் வெளியேறியது யாருடைய தூண்டுதலால்?

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ற்கான இறுதி பைனல் போட்டிக்கு இரண்டு நாட்கள் மட்டுமே காணப்படுகின்றன.  இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் சீசன்களை போல் அல்லாமல் இந்த முறை கடைசி இரண்டு வாரங்களில் ஏற்கனவே எலிமினேட் ஆன போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி உள்ளே இருந்த ஆறு போட்டியாளர்களை பதற்றம் அடைய செய்வது போன்ற  வேலைகள் இடம் பெற்றுள்ளன.

எனினும் பிக்பாஸ் டைட்டிலை ஒரு நபர் மட்டுமே வின் பண்ண முடியும் என்பதால் மீதமுள்ள போட்டியாளர்களை வெறும் கையோடு செல்வதை தவிர்க்க, பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது. அதிலும் மிகப்பெரிய டுஸ்டை வைத்தால் பிக் பாஸ்.

அதன்படி பணத்தின் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து அதற்கான தூரம் வரை ஓடிச் சென்று அதை மீண்டும் எடுத்து வரவேண்டும். கதவு மூடப்பட்டால் நீங்கள் எலிமினேட் ஆனதாக அர்த்தம் என கூறப்பட்டது. அந்த வகையில் ஜாக்குலின் பண பெட்டியை எடுக்க முடியாமல் வீட்டிற்குள் திரும்ப முடியாமல் எலிமினேட் ஆனார்.


இந்த வாரம் மிட் விக் எவிக்சன் நடைபெறும் என போட்டியாளர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் பணப்பெட்டி டாஸ்க் மூலம் ஒருவரை வெளியேற்றுவதற்கு பிக் பாஸ் முடிவு செய்துள்ளார். 

இவர்களுள் முத்துக்குமரன், ரயான், விஷால், பவித்ரா ஆகியோர் வெற்றிகரமாக பண பெட்டியுடன் திரும்பி வந்தார்கள். ஆனாலும் சௌந்தர்யா பாதி தூரத்திலேயே பயந்து மீண்டும் வீட்டிற்குள்  திரும்பி தப்பித்து விட்டார். ஜாக்குலின் தான் பணப்பெட்டியை எடுக்கச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் திரும்ப முடியாமல் எலிமினேட் ஆகியுள்ளார்.

இந்த நிலையில், 15 வாரங்களாக நாமினேட் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு வந்த ஜாக்குலின் தனக்குத்தானே மண்ணை வாரி போட்டதாக ரசிகர்கள் தமது வேதனையை பகிர்ந்து வருகின்றார்கள். 


அதாவது அனைவருக்கும் கொடுக்கப்பட்டது போலவே ஜாக்குலினுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அவர் எலிமினேட் ஆகியுள்ளார்.

மேலும் தகுதியான போட்டியாளர்கள் எல்லோரும் தற்போது வெளியேறி விட்டார்கள். குறிப்பாக மஞ்சரி, தீபக், ஜாக்குலின் ஆகியோர் இறுதி பைனலுக்கு செல்வார்கள் என நம்பப்பட்டது. ஆனாலும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் விஷால், பவித்ரா, சௌந்தர்யா இருப்பது தகுதி இல்லாமல் தான் என ரசிகர்கள் தமது கருத்தை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement